என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை - சினிமாவில் பெண்கள் நிலை பற்றி ஆவேசமாக குஷ்பூ சொன்னது
சினிமாவில் பெண்களில் நிலை குறித்து நடிகை குஷ்பூ அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதன் பின் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கி இருந்தார். மேலும், சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பூ. அதோடு ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். பின் இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
குஷ்பூ திரைப்பயணம்:
பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதனிடையே குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய இரண்டு மகள்களும் படித்து முடித்து விட்டு தங்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
குஷ்பூ பேட்டி:
மேலும், குஷ்பூ அவர்கள் நடிப்பு மீது கவனம் செலுத்தி வந்தாலும், அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பை வகுத்து வருகிறார். அதேசமயம் இவர் படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்பூ, பெண்களை மையமாக கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் கொடுக்காது. நான் என் வார்த்தைகளை திரும்பப் பெறப் போவதுமில்லை. இப்போது காலம் மாறிவிட்டது என்றும் சொல்லப் போவதில்லை.
சினிமா பற்றி சொன்னது:
உண்மைகளை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். பெண்களை மையமாகக் கொண்ட அரண்மனை 4, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்கள் எப்போதாவது தான் வரும். இப்போதும் கான்கள், சூப்பர் ஸ்டார்கள், உலகநாயகன் ஆகியோருக்கு தான் தியேட்டர்கள் அதிகமாக இருக்கிறது. எல்லோருக்கும் தியேட்டருக்கு கிடைக்க இன்னும் காலம் ஆகும். ஓடிடி தளத்தில் பெண்கள் மிகச் சிறப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாலிவுட் நடிகை டிம்பிள் பார்க்கும்போதெல்லாம் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
குஷ்பூ நடிக்கும் சீரியல்:
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஓடிடி தளங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு நிறைய ஸ்பேஸ் இருக்கிறது. டார்லிங்ஸ், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ், டப்பா கார்டெல், மகாராணி என எதுவாக இருந்தாலும் பெண் நடிகர்கள் பெரிய திரையில் செய்ய முடியாததை ஓடிடியில் செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரோஜினி’ சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.