பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் இன்று (ஏப்ரல் 30) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. தற்போது கே.வி.ஆனந்த்தின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பட பத்திரிகையாளரான இவர் ஆரம்ப காலத்தில் கல்கி இந்தியா டுடே போன்ற பல்வேறு தேசிய பத்திரிகைகளில் வேலை செய்திருக்கிறார்.

பின்னர் இவருக்கு சினிமா மீது ஏற்பட்ட ஆசையால் பிரபல ஒளிப்பதிவாளரான பி சி ஸ்ரீராம் இடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார் இவர் சேர்ந்த சமயத்தில் பிரபல இயக்குனர் ஜீவா ஸ்ரீராமின் முதல் உதவியாளராக இருந்தவர் அப்போது கேவி ஆனந்த் பிசி ஸ்ரீராம் இடம் 6வது உதவியாளராக சேர்ந்தார். பிசி ஸ்ரீராமிடடம் பணியாற்றியபோது பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிசி ஸ்ரீராமை அணுகியிருக்கிறார் அப்போது அவரால் அந்த படத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்று கே வி ஆனந்தை சிபாரிசு செய்து அந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஆக்கியிருக்கிறார்.

Advertisement

அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு கேவி ஆனந்த் இருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.கே வி ஆனந்த் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என்று 14 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களாக முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

தொடர்ந்து ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த், பின்னர் இயக்குனராக களமிறங்கினார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் 2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் பிரித்திவிராஜ் கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் திரைப்படம் மூலம் தான் அதன் பின்னர் அயன் கோ மாற்றான் அனேகன் காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Advertisement