இந்த சமயத்தில் சில உண்மைகளைச் சொல்லனும் - ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நாரயணா வெளியிட்ட வீடியோ
கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஜனநாயகன் தான். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜனநாயகன். இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க உத்தரவு போட்டும் தணிக்கை குழு மேல் முறையீடு செய்து இருக்கிறது.
சென்சார் பிரச்சனையால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆக முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே சோகத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன்படத்தின் தயாரிப்பாளரும், கே வி என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், அன்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் ஜனாயகன் படத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனநாயகன்:
கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு நிறைய அழைப்புகள் மெசேஜ்கள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த படம் ஏற்கனவே உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இடம் பிடித்திருக்கிறது என்பதை இந்த செய்திகள் நினைவூட்டுகிறது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால் எங்களால் சில விஷயங்களை மட்டும் தான் சொல்ல முடியும். இந்த படம் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதியே தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டு டிசம்பர் 22ஆம் தேதி சில மாற்றங்களுக்கு பின் U/A 16+ சான்றிதழ் வழங்கப்படும் என்று சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=oIDd0bXIlQ4
தள்ளிப்போகும் ரிலீஸ்
தணிக்கை குழு சொன்ன மாற்றங்களையெல்லாம் செய்து படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். முறையான சான்றிதலுக்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம். திட்டமிட்டபடி படம் வெளியாக இருந்த சில நாட்களுக்கு முன்பு ஜனவரி 5ஆம் தேதி மாலையில் ஒரு புகாரின் அடிப்படையில் இந்த படம் மறு ஆய்வு குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. போதிய நேரம் இல்லாத காரணத்தினால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6, 7 தேதிகளில் விசாரணை நடந்தது. நேற்று நீதிமன்றம் யு/ஏ 16+ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இருந்தாலும் தணிக்கை வாரியம். உடனடியாக இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதனால் சான்றிதழ் வழங்கக்கூடிய உத்தரவு தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் வீடியோ:
இந்த இக்கட்டான காலத்தில் எங்களுடன் நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி படத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க எங்களால் முடிந்தவரை முயற்சிகளை எடுத்தோம். இந்த மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. இது ஒரு கஷ்டமான காலம். தளபதி விஜய் சார் தன்னுடைய ரசிகர்களின் அன்பிற்கும் திரைத்துறையின் மதிப்பிற்கும் ஏற்ற ஒரு சிறந்த விடை பெற தகுதியானவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்களுடைய பொறுமையும் நம்பிக்கையும் அசைக்க முடியாத ஆதரவை எங்களுக்கு வலிமை அளிக்கிறது. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த படம் விரைவில் உங்களை வந்தடையும் என்று நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.