பெத்த பிள்ளை மீது கோபத்தில் இருக்கிறாரா லட்சுமி டகுபதி? நாக சைதன்யா மீது இவ்ளோ வெறுப்பா?
நாகசைதன்யாவின் நிச்சயதார்த்த விழாவிற்கு அவருடைய தாய் லட்சுமிகலந்து கொள்ளாததற்கு காரணம் தான் தற்போது இணையத்தில் வயதாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார்.
இதனிடையே நாக சைதன்யா- சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 இருவரும் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.
நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்:
இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. சமீபத்தில் தான் நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது. பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவிலேயே இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லட்சுமி டகுபதி குறித்த தகவல்:
மேலும், இந்த விழாவில் நாகர்ஜுனா, அமலா, அகில், துலிபாலா குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள். ஆனால், நாக சைதன்யாவின் தாய் லட்சுமி டகுபதி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த யாருமே கலந்து கொள்ளவில்லை. லட்சுமி அவர்கள் நாகார்ஜுனாவை பிரிந்தவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதோடு படிப்பை முடிக்கும் வரை நாக சைதன்யா தன்னுடைய அம்மாவுடன் தான் இருந்தார்.
நாக சைதன்யா குறித்த தகவல்:
பின் நாக சைதன்யா சினிமாவிற்குள் நுழைந்தவுடன் அப்பாவிடம் வந்து சேர்ந்துவிட்டார். அதேபோல் அமலாவும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நாக சைதன்யாவை தன்னுடைய மகனாகவே பார்த்து வளர்த்தார். இந்த நிலையில் தன்னுடைய மகனின் நிச்சயதார்த்தத்திற்குநாக சைதன்யாவின் தாய் லக்ஷ்மி வராதது குறித்து பலருமே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு காரணம், சமந்தா என்று கூறப்படுகிறது. நாக சைதன்யா- சமந்தா பிரிந்தது லக்ஷ்மிக்கு பிடிக்கவில்லை. சமந்தாவை தன்னுடைய மருமகளாக ஆகவே அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், சோபிதாவை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நாக சைதன்யா மீது கோபம்:
அதுமட்டுமில்லாமல் விவாகரத்து செய்த போதும் சமந்தா மீது எந்த தவறும் இல்லை, நாக சைதன்யா மீது தான் தவறு இருக்கிறது என்றெல்லாம் லட்சுமி கூறியிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே சமந்தாவிற்கு தான் லட்சுமி ஆதரவு கொடுத்து வந்தார். இதனாலே நாக சைதன்யாவுடன் அவர் பேசுவதும் இல்லை. அதோடு சமந்தா உடல்நிலை குறைவாக இருந்தபோது கூட அக்கறையாக விசாரித்து இருந்தார். இப்படி சமந்தாவின் மீது உள்ள பாசத்தினால் தான் நாகசைதன்யா மீது லட்சுமி டகுபதி கோபத்தை காண்பிக்கிறார். அதுமட்டுமில்லாமல் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திலும் அவருக்கு விருப்பம் இல்லை. அதில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது.