தனது முதல் காதல் பற்றி மனம் திறந்த நடிகை லட்சுமி மேனன்- யார் அது என்று தெரியுமா?

By subhashini · 26/6/2024

தன்னுடைய முதல் காதல் குறித்து நடிகை லக்ஷ்மி மேனன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் இளம் புயலாக வந்து பிரபலமான நடிகையாக இருப்பவர் லட்சுமி மேனன். தமிழில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான 'கும்கி' படம் மூலம் அறிமுகமனவர் லட்சுமி மேனன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது.

இதனை தொடர்ந்து இவர் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் இடையில் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி தன்னுடைய படிப்பில் அதிக கவனம் செலுத்தி இருந்தார்.

லட்சுமிமேனன் திரைப்பயணம்:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த 'சந்திரமுகி 2' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் லட்சுமி மேனன் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் கங்கனா, ராதிகா, வடிவேல் உட்பட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தோல்வியை தழுவியது என்று தான் சொல்லணும். ஆனாலும், லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்திருக்கிறது.

லட்சுமி மேனன் நடிக்கும் படங்கள்:

அந்த வகையில் இவர் ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சப்தம்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆதி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின் மலை, எங் மங் சங், ஜெமினி கணேசன், சரவணன் இயக்கத்தில் சிப்பாய் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

லட்சுமி மேனன் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் லட்சுமிமேனன் தன்னுடைய முதல் காதல் குறித்து சொன்னது, இதுவரை என்னிடம் யாரும் காதலை சொல்லவில்லை. நான் தான் என்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் ஸ்கூலில் படிக்கும் போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேரடியாகவே சென்று என்னுடைய காதலை சொன்னேன். ஆனால், அவர் சில நாட்கள் கழித்து தான் என்னுடைய காதலை ஒப்புக்கொண்டார்.

முதல் காதல் குறித்து சொன்னது:

அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசினோம், தொலைபேசியில் பேசினோம். போர்வைக்குள் இருந்து கொண்டு என் வீட்டிற்கு தெரியாமல் எல்லாம் அவரிடம் பேசினேன். நாங்கள் இருவரும் எங்களுடைய படிப்பை பற்றி மட்டும்தான் யோசித்தோம். அப்போது எனக்கு சினிமா வாய்ப்பு வந்ததால் என்னால் படிப்பையும் காதலையும் தொடரமுடியவில்லை . அதன் பிறகு இருவரும் பேசவே இல்லை. சமீபத்தில் தான் அவருக்கும் திருமணம் நடந்தது என்று கேள்விப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full