தயவு செஞ்சி சினிமாவை விட்டு போய் திருமணம் செஞ்சுக்குங்க - அட்வைஸ் செய்த ரசிகருக்கு லட்சுமி மேனன் கொடுத்த பதிலடி.

By Rajkumar · 19/9/2020

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனின் சில புகைப்படங்கள் வைரலானது. அதில் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதற்கு ரசிகர் ஒரு லட்சுமி மேனனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், நீங்கள் திருமணம் செய்து கொண்டால் நல்லது தயவுசெய்து சினிமாவை விட்டுவிட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள் என்று கூறி இருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள லட்சுமிமேனன் என்னுடைய அக்கறையான நலம் விரும்பு என்னைப்போல தேவதை திருமணம் செய்து கொண்டு தான் நிம்மதியை அடைய முடியும் என்று நினைக்கிறார். பாவாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை லட்சுமி மேனன் விஷாலுடன் காதலில் இருந்தார் என்ற கிசு கிசு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full