'ஆதவன் படத்துல வர சரோஜா தேவி மாதிரியே இருக்கீங்க' - லட்சுமி மேனனை கலாய்க்கும் ரசிகர்கள். காரணம் இதான்.

By Rajkumar · 1/3/2021

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

இதையும் பாருங்க : மாலத்தீவு சென்ற டிடி - பிகினி உடை புகைப்படம் பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்க.

படிப்பை தொடர்ந்ததோடு நடனத்திலும் ஆர்வம் காட்டி வந்தார் லட்சுமி மேனன். சமீபத்தில் நடிகை லட்சுமி மேனனின் சில புகைப்படங்கள் வைரலானது. அதில் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். மேலும், விரைவில் இவர் தமிழில் ரீ - என்ட்ரி ஆகவும் இருக்கிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக லட்சுமி மேனன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அதே போல இவர் பதிவிடும் புகைப்படங்கள் ஒரு சில நேரங்களில் கேலிக்கு உள்ளாகி விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் தூங்குவது போல இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார். அதில் இவர் மேக்கப் அணிந்து கொண்டு இருப்பதை கண்ட நெட்டிசன்கள், தூங்கும் போது கூட மேக்கப் தேவையா என்று கேலி செய்துள்ளனர். அதிலும் ஒருவர் 'ஆதவன் படத்துல வர சரோஜா தேவி மாதிரியே இருக்கீங்க' என்று பங்கமாக கமன்ட் செய்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full