சூப்பர் சிங்கரில் பிரியங்காவுக்கு பதில் புது தொகுப்பாளர் - முதல் நாளே அவர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

By ·

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் புது தொகுப்பாளர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட, மழலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் சீனியர் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான் தொகுத்து வழங்குகிறார்கள். சமீபத்தில் தான் பிரியங்காவிற்கு திருமணம் நடந்தது. இவர் வெளிநாட்டில் வசி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார்.

ப்ரியங்கா குறித்த தகவல்:

இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் ப்ரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து விலகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியை பிரியங்காவிற்கு பதில் லட்சுமி பிரியா தான் தொகுத்து வழங்குகிறார். இவர் வேறு யாருமில்லை மகாநதி சீரியல் நடிகை தான்.

https://www.youtube.com/watch?v=31ZnkISpHZI

லட்சுமி பிரியா குறித்த தகவல்:

இதற்கு முன்பு லட்சுமி பிரியா, கலர்ஸ் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த சீரியலில் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது லட்சுமி ப்ரியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் தொடர்பாக நடிகை லட்சுமி பிரியா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Lakshmi Priya (@lakshmipriyaoffl)

லட்சுமி பிரியா பதிவு:

அதில் அவர், ப்ரோமோவுக்கே இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால், முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். இன்னும் நீண்ட தூரம் நான் போக வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் சொல்ல வேண்டும், எல்லா தொகுப்பாளர்கள் மீதும் பெரிய மரியாதை வந்திருக்கிறது. இது ஈஸியான வேலை இல்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full