ஒரே சொல்லில் என் காதல் கோட்டையை உடைத்து விட்டார் கமல் - லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னது

By subhashini · 22/7/2025

தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும். இந்த நிகழ்ச்சியை இவர் வெற்றிகரமாக 1500 எபிசோடுகள் வரை தொகுத்து வழங்கியிருந்தார்

இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் கரு. பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்த தகவல்:

அந்த வகையில் இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மேலும், இவர் நீண்ட இடைவெளிக்கு பின் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தயாரித்து இயக்கி இருந்த திரைப்படம் ஆர் யூ ஓகே பேபி.

நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்:

இந்த படத்தில் கதாநாயகனாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். படத்தில் இவருடன் அபிராமி, மிஸ்கின், முருகா, அசோக், பாவல் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் காதல்:

சகப் போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இவர் விளையாடி வருகிறார். குறிப்பாக இவருடைய கேரள சமையலுக்கு அங்கு இருக்கும் நடுவர்களே அடிமையாகி விட்டார்கள் என்று சொல்லலாம். அதோட
வாரம் வாரம் வித்தியாசமாக சமைத்து அசத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணர். இந்த சீசனில் பைனல் லிஸ்ட் ஆக இவர் வருவார் என்றெல்லாம் கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய காதலை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் தோல்விக்கு காரணம்:

அதில் அவர், நான் கல்லூரி காலத்தில் படிக்கும்போது கமலஹாசனை காதலித்தேன். அவரை ஒருமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் அவரிடம் என்னுடைய காதலை சொல்லி விட வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். பின் அவரிடம் பேச போகும்போது கமல் என்னை பார்த்து தங்கச்சி என்று அழைத்து விட்டார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தையால் என்னால் காதலை சொல்லவே முடியவில்லை. என்னுடைய காதல் கோட்டை தகர்ந்து விட்டது இதனால். நான் திரும்பி வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full