என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். மேலும், இவர் திரைப்பட நடிகையாகவும் , இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார். இதுவரை 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

அதேபோல இவர் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய மீட்பு விவகாரம் குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்பட நடிகை சின்மயி உள்ளிட்ட பிரபல பெண்கள் உடன் இணைந்து பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து பேசி இருந்தார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர். இவருடைய அப்பா கிருஷ்ணசாமி இந்தியாவின் மிகப்பெரிய நூல் வியாபாரி.

Advertisement

லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை ஓமன் நாட்டில் இருந்து பின்னர் 2005ல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார் லட்சுமி.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி ராமகிருஷ்ணன், தனக்கும் தனது மகளுக்கும் நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அதில் தன்னுடைய சின்ன வயதில் அப்பா வயதில் இருக்கு ஒரு நபர் தன்னை தவறான முறையில் தொட்டதாக கூறி இருந்தார். மேலும், தனது மகள் ஒருவர் ஒருமுறை லிப்ட்டில் சென்ற போது அதில் இருந்த ஒரு நபர் பேண்டை அவிழ்த்து காட்டியதாகவும். இதனால் தனது மகள் பதறி அடித்திக்கொண்டு ஓடிவந்ததாக கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement
Advertisement