கோலாகலமாக நடந்து முடிந்த லட்சுமி ஸ்டோர்ஸ் நக்ஷத்ராவின் திருமணம். வெளியான புகைப்படம் இதோ.
இந்த கொரோனா சமயத்திலும் பல்வேறு நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் திருமணத்தை முடித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் தனது திருமணத்தை முடித்து ஒருகிறார். சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகள் தான் இல்லத்தரசிகள் மனதில் மிகவும் எளிதாக இடம்பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினியாக ஆரம்பத்தில் அறிமுகமாகி பின்னர் பஞ்சுமிட்டாய் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இல்லத் தரசிகள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை நக்சத்ரா நாகேஷ்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதே போல மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக சன் டிவி எதாவது ஒரு சீரியலை ஆரம்பித்துவிடுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை போல சன் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் லட்சுமி ஸ்டோர்ஸ்.
இதையும் பாருங்க : 'காலைல 4 மணிக்கு குளிச்சிட்டு கத கேப்பார்' அஸ்வினுக்கு பிரபல நடிகரின் கதை கேட்கும் பழக்கத்தை உதாரணம் சொன்ன ப்ளூ சட்டை.
இந்த சீரியலில் பஞ்சுமிட்டாய் என்ற செல்லப்பெயரோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நக்சத்ரா. முன்னனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நட்சத்திர நாகேஷ். அதற்கு பிறகு இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பொது விழாக்கள், சினிமா விழாக்கள்,சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார்.
நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு ராகவ் என்பவருடன் நிச்சயதார்தம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இன்று இவர்களின் திருணம் நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்கள் இதோ.