ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல் - கடைசிநாளில் சுசித்ரா வெளியிட்ட எமோஷனல் வீடியோ

By subhashini · 23/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் இனியா, செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக சுதாகரின் மகன் நிதிஷுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல்:

சுதாகர், பாக்கியா ரெஸ்டாரண்டை யாருக்குமே தெரியாமல் அபகரித்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் உடைந்து, ஒரு சின்ன ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறார். பின் பாக்கியா ரெஸ்டாரண்டை சுதாகர் தான் அபகரித்தார் என்ற விஷயம் இனியாவிற்கு தெரிந்து விடுகிறது. இருந்தாலுமே அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. பின் இனியா, ஆகாஷை காதலித்தார் என்ற விஷயம் நிதிஷுக்கு தெரிந்ததிலிருந்து அவர் நடவடிக்கைகள் சரியே இல்லை.

சீரியல் ட்ராக்:

நிதிஷ் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார். ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரியாமல் இனியாவை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். கடைசியில் இனியாவிற்கு நிதிஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கைதான விஷயம் தெரிந்து விடுகிறது. இதனால் அவர் ரொம்பவே மனமடைந்து விடுகிறார். பின் பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோருமே இந்த விஷயம் தெரிந்து விடுகிறது. அதிர்ந் பின் இனியா, நிதிஷ் உடன் சேர்ந்து வாழ வேண்டாம் என்று முடிவெடுத்து விடுகிறார்கள்.

சீரியல் அப்டேட்:

இனியாவுமே தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் இனியா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் சுதாகர், பாக்கியா குடும்பத்தை பழிவாங்க தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் முடிய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாக்கியலட்சுமி சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்குதாக ப்ரோமோ வெளியாகியிருந்தது.

View this post on Instagram

A post shared by Suchitra Ks (@suchitraks)

சுசித்ரா வீடியோ:

தற்போது இதை உறுதி செய்யும் வகையில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பாக்கியலட்சுமி சீரியலுக்கு இவ்வளவு நாட்களாக ஆதரவும் அன்பும் கொடுத்த எல்லோருக்குமே நன்றி. பாக்கியலட்சுமி சீரியல் முடியப்போகிறது. இந்த சீரியல் வெற்றிகரமாக சென்றிருப்பதற்கு காரணம் உங்களுடைய அன்பும் ஆதரவும் தான். இதை அடுத்து நான் வேறொரு பிராஜெக்டில் கமிட்டாகி இருக்கிறேன். அதற்கும் உங்களுடைய சப்போர்ட் தேவை. எல்லோருக்குமே இந்த தருணத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full