குட்டி டாக்டர் சேது மீண்டும் வந்திட்டார் - சேதுராமன் மனைவி பதிவிட்ட உருக்கமான பதிவு.

By Rajkumar · 4/8/2020

தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

தனது மகளுடன் சேதுராமன்

டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இப்படி ஒரு நிலையில் உமாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனதுசமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள சேதுராமமனின், மனைவி, அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி, ஆம், குட்டி சேதுராமன் மீண்டும் வந்துவிட்டார் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full