தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், படங்களில் இவர் நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறார்.

மறைந்த நடிகர் வினு சக்ரவர்த்தி :

இப்படி சினிமா துறையில் பல சாதனைகளை செய்த இவர் தான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தான் சில்க் ஸ்மிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

Advertisement

சிலுக்கு அறிமுகம் செய்த வினு சக்ரவர்த்தி :

இப்படி தென்னிந்திய சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா மன உளைச்சலினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் இன்றும் இவரைப்பற்றி சோசியல் மீடியாவில் பேசப்பட்டு தான் வருகிறது. இந்த அளவிற்கு இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் வினுசக்கரவர்த்தி. இந்நிலையில் சில்க் ஸ்மிதாவை சினிமாவிற்குள் கொண்டு வந்த அனுபவத்தை வினுசக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

வீட்டு வேலை செய்த பெண் :

அதில் அவர் கூறியது, என்னுடைய படத்தயாரிப்பாளர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான நடிகை வேண்டும் என்று பல நடிகைகளின் பெயர்களை சொல்லியிருந்தார். ஆனால், எனக்கு அதில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. புதிதாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. அப்போது ஒரு நாள் மாவரைக்கும் மிஷின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன். அவர் சட்டென்று திரும்பிப் பார்க்கும்போது அவருடைய கண் காந்தம் போல் என்னை ஈர்த்தது.

Advertisement

விஜயமாலா சிலுக்காக மாறிய தருணம் :

அப்போது அவரிடம் பேசினேன். அவர் என்னுடைய பெயர் விஜய மாலா, ஆந்திராவை சேர்ந்தவர். இங்கு தமிழ்நாட்டிற்கு வந்து 17 நாட்கள் ஆகிறது என்று சொன்னார். உடனே நான் நடிக்கிறியா? என்று கேட்டேன். அதற்கு அவர் நான் எங்கள் ஊரில் திருவிழாக்களில் நடனம் ஆடியிருக்கிறேன். எனக்கு நடனம் ஆடனும் ஆசை இருக்கு என்று சொன்னார். பின் அவருக்கு எப்படிப் பேசுவது? எப்படி நடிப்பது? என்று ஒவ்வொன்றையும் கற்று கொடுத்தேன். சில்க்ஸ்மிதாவும் 12 நாட்களில் எல்லாமே கற்று கொண்டார். அப்படிதான் சில்க் ஸ்மிதாவை உருவாக்கினேன்.

Advertisement

அசந்து போன தயாரிப்பாளர் :

பின் நான் சில்க் ஸ்மிதாவை கொண்டுபோய் இயக்குனர்களிடம், தயாரிப்பாளாரிடம் காண்பித்தவுடன் அவர்கள் எங்கிருந்து பிடித்து கொண்டு வந்தாய். ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் இவர் கலக்கப் போகிறார் என்று கூறினார்கள். அதே போல் அவரும் கலக்கினார் என்று கூறியிருந்தார். அதே போல சில்க் ஸ்மிதா தாய் தந்தை இல்லாமல் கேட்பார் இல்லாமல் இருந்ததால் தான் அவர் அப்படி ஆனார் என்றும் கூறியுள்ளார்.

Advertisement