யாரும் பார்த்திடாத மறைந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண வீடியோ- எப்படி இருக்கார் பாருங்க

By subhashini · 10/7/2024

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டடங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். இவரது தந்தை தென்னிந்திய சினிமாவில் பிரபலாமான தயாரிப்பாளரும், திரைப்பட எழுத்தாளருமாக இருந்தவர்.

தொடக்கத்தில் மருத்துவம் படித்து வந்த சௌந்தர்யா பின்னாளில் நடிப்பின் மீது வந்த காதலினால் படிப்பை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். 1993ஆம் ஆண்டு வெளியான 'பொண்ணு மணி' என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இருந்தார். அதன் பின்னர் இவர் ரஜினிகாந்துடன் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்துடன் சொக்கத்தங்கம் போன்ற படங்களினால் முன்னணி நடிகையாக மாறி இருந்தார்.

சௌந்தர்யா திரைப்பயணம்:

அதை தொடர்ந்து இவர் உலகநாயகன் கமலஹாசன், கார்த்தி, விஜயகாந்த், சிரஞ்சீவி என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருந்தார். மேலும் குறைவான காலத்தில் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து விட்டார் சௌந்தர்யா. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜி.எஸ் ராகு என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவரது கணவர் மென்பொருள் பொறியாளர் என்பது குறிப்பிடதக்கது.

விபத்தில் மறந்த சௌந்தர்யா :

இப்படி பட்ட நிலையில் தான் நடிகை சௌந்தர்யா 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் சென்று இருந்தார். அப்போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யா அவர்கள் அநியாயமாக உயிரிழந்தார். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரின் இழப்பு தென்னிந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

வைரலான புகைப்படம் :

கடந்த ஆண்டு மறைந்த நடிகை சௌந்தர்யாவை போல இருக்கும் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவுகளை போட்டு இருந்தார். அவர் பெயர் சித்ரா. இவர் பார்ப்பதற்கு மறைந்த நடிகை சௌந்தர்யாவை போல அப்படியே இருக்கிறார். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வைரலானதை தொடர்ந்து பலரும் ஆச்சரியப்பட்டு இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by SOUNDARYA 👑 (@actress.soundarya)

சௌந்தர்யா திருமண வீடியோ:

இந்த நிலையில் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. நடிகை சௌந்தர்யாவின் திருமண புகைப்படத்தை பலருமே பார்த்திருப்பார்கள். ஆனால், அவருடைய வீடியோவை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்போது சௌந்தர்யாவின் திருமண வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full