'ஜாவ் ஜாவ்'னு சொல்லிட்டான் குர்கா - அஜித்தை நேரில் சந்திக்க சென்று அசிங்கப்பட்டுள்ள மறைந்த மாஸ்டர் சிவஷங்கர். வீடியோ இதோ.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் மாஸ்டர் நேற்று காலமான விஷயம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருந்தார். இவரது மருத்துவ சிகிசிகைக்கு பணம் இல்லாததால் இவரது குடும்பத்தினர் உதவி கோரிய நிலையில் பல பிரபலங்கள் இவரது சிகிச்சைக்கு பண உதவி செய்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவஷங்கர் மாஸ்டர், அஜித் குறித்து பேசிய போது 'நான் தலைக்கு அந்த டான்ஸ் பண்ணி கொடுத்தேன் அவர் என்னை புகழ்ந்து பேசினார் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால். இதுவரை அவர் ஏதாவது நடிக்க என்னை அழைத்தாரா ? அவருக்கு கெடுதலா பன்னேன் அவர் ஒரு வார்த்தை சொன்னால் எனக்கு எத்தனை படம் வரும்.
வீடியோவில் 13 நிமிடத்தில் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=fxX-3FiuKbY
ஆனால், சொல்லமாட்டார்கள் நான் என்ன பணம் காசு கேட்கிறேன். அவர் வீட்டுக்கு சென்று அவரை பார்க்க வேண்டுமென்று சென்றேன் ஆனால் அங்கே இருந்த கூர்க்கா ஜாவ் ஜாவனு சொல்லிவிட்டான். அங்கே கேமரா இருக்கிறது நான் வந்து தெரியாது அவர் பார்த்திருப்பார் இல்ல இது எல்லாம் மன வருத்தமான விஷயம் அவர் நல்ல மனிதன் அவர் நல்லா இருக்கட்டும் அவ்வளவுதான்