அப்பா மாதிரி லவ் ஸ்டோரி பண்ணனும்னு ஆசை, ஆனால் - இயக்குநர் ஜீவாவின் மகள் சனா மரியம் சொன்னது

By subhashini · 6/1/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக இருந்தவர் ஜீவா. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டிருந்தவர். இவர் முதலில் பி.சி.ஸ்ரீராமுக்கு உதவியாக தன்னுடைய கேரியரை தொடங்கியிருந்தார். அதற்குப்பின் இவர் சொந்தமாக
12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே போன்ற படங்களை எல்லாம் இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

இவர் 2007 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார். இவர் இவ்வுலகில் இல்லை என்றாலும் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், இவரின் மகள் தான் சனா மரியம். தற்போது இவர் சினிமா துறையிலேயே களமிறங்கி இருக்கிறார். இவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிகோலஸ் இசையமைத்திற்கும் ஐயையோ என்ற பாடலின் வீடியோவை இயக்கி இருக்கிறார்.

சனா மரியம் பேட்டி:

கூடிய விரைவில் இவர் சினிமாவிலும் இயக்குனராக கால் தடம் பதிய இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சனா மரியம், என்னிடம் இந்த மாதிரியான ஒரு பாடல் ஹாரிஸ் சாரோட மகன் செய்யுறாரு என்று சொன்னார்கள். அதை கேட்டவுடன் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவர் என்ன மாதிரியான பாடல் பண்ண போறாரு என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதல் முறை அந்த பாடலை கேட்கும் போதே நிச்சயமாக ஹிட் அடிக்கும் என்று நினைத்தேன். எல்லோருமே இந்த பாடலை கேட்டு டான்ஸ் ஆடுவார்கள்.

இயக்குனர் ஜீவா குறித்து சொன்னது:

நிக்கோலஸ், வயசு பசங்க எப்படி ஒரு பார்ட்டி பண்ணுவாங்கன்னு யோசித்து இந்த மியூசிக் வீடியோவை செய்திருக்கிறார். அவ்வளவு முதிர்ச்சியோட இந்த பாடலை கொடுத்திருக்கிறார். மேலும், நான் ஃபிலிம் ஸ்கூல் முடித்ததுமே எல்லோரும் போலவே வேலைக்கு அப்ளை பண்ணிட்டு இருந்தேன். அப்போ மணிரத்தினம் சார் செக்கச்சிவந்த வானம் படம் எடுத்துக் கொண்டிருந்தார். நான் அவருடைய நேர்காணல் அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகி அவரின் பொன்னியின் செல்வன் 1, 2 பாகங்களில் வேலை பார்த்தேன்.

https://www.youtube.com/watch?v=UR0lHZZ8YTY

கேரியர் குறித்து சொன்னது:

இப்ப நான் தனியாக படம் பண்றதுக்கான வேலைகளில் இருந்திருக்கிறேன்.
மணி சார் ஸ்கூலில் தான் எல்லா விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை படித்தேன். மணிரத்தினம் சார் கிட்ட ஃபிலிம் மேக்கிங் பற்றி கற்றுக் கொண்டேன். மணிரத்தினம் சார் தினமும் அர்ப்பணிப்போட கடினமாக உழைப்பார். ஓய்வில்லாமல் தினம் தோறும் புதுசு புதுசாக யோசித்துக் கொண்டே இருப்பார். அது எனக்கு ரொம்ப இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறது. சின்ன வயதில் இருந்தே நான் ஷூட்டிங் செட்டில் தான் வளர்ந்தேன்.

இயக்கும் பற்றி சொன்னது:

அப்பா- அம்மா ரெண்டு பேருமே சினிமாவில் தான் இருந்தார்கள். அதை பார்த்து பார்த்து சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது எண்ணம் வந்துவிட்டது. இந்த வருடத்தில் படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி விடுவோம். எனக்கு அப்பா மாதிரி ஒரு லவ் ஸ்டோரி பண்ணி தொடங்கணும்னு ஆசை இருக்கு. ஆனால், அந்த ஐடியா எனக்கு நேச்சுரலாக வரவில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுதி இப்ப அந்த படத்தை பண்ணுவதற்காக தான் பிளான் பண்ணுகிறேன். 'ஜென் சி' வைப் கலந்த படமாக கொடுக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full