மறைந்த எம் பி வசந்த குமரின் ஒரு மகன் விஜய் வசந்தை தெரியும். அவரின் மற்றொரு மகன் யார் தெரியுமா ?

By Rajkumar · 31/8/2020

வசந்த் அண்ட் கோ, வசந்த் தொலைக்காட்சின் நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தி.நகரில் உள்ள வசந்த குமாரின் மறைவிற்கு பின்னர் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் 10 மணி அளவில் அவரது உடல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேரமின்மை காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம், குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது சொந்த நிலத்தில் அவரது அப்பா அம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. வசந்த குமாருக்கு, விஜய் வசந்த் என்ற மகன் இருக்கிறார் என்பது பலருக்கும் அறிந்த விஷயம். நடிகரான இவர், 2007 ஆம் ஆண்டு வெளியான 'சென்னை 28' படத்தின் மூலம் அறிமுகமானார்.

https://twitter.com/vinoth3335/status/1300361922345226240

அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார் விஜய் வசந்த். அனால், வசந்த குமாருக்கு வினோத் குமார் என்ற மகனும் தங்கமலர் என்ற மகளும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. சமீபத்தில் தனது தந்தையின் மறைவு குறித்து வினோத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை இந்த உலகத்தில் வாழ்ந்த மிகவும் நேர்மையான மற்றும் சந்தோஷமான மனிதர். எங்களுக்காக நீங்கள் கொடுத்த அனைத்திற்கும் நன்றி கடவுளுக்கு உங்களுக்கான வேலைகள் பல இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full