விஜய்யின் கோட் படத்தில் பவதாரணிக்காக யுவன் செய்திருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள்.

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இந்த நிலையில் விஜயின் கோட் படம் குறித்த அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் மறைந்த பாடகி பவதாரணியை பாட வைக்க யுவன் சங்கர் ராஜா முடிவு செய்திருந்தார்.

Advertisement

விஜய் கோட் படம்:

அந்த சமயத்தில் தான் பவதாரணிக்கு உடல்நிலை சரி இல்லாமல் போயிருந்தது. பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து இருந்தார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக இவர் இலங்கையில் சிகிச்சை எடுத்து இருந்தார். அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்தார். பின் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 47 தான்.

பவதாரணி இறப்பு:

இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். பின் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தி குடும்ப சம்பிரதாய படி சடங்குகள் எல்லாம் செய்து முடித்து இருந்தார்கள். மேலும், இவருடைய அண்ணன் யுவன் சங்கர் ராஜா எப்படியாவது கோட் படத்தில் ஒரு பாடலையாவது பவதாரணியை பாட வைக்க வேண்டும் என்று முயற்சி செய்திருந்தார்.

Advertisement

யுவன் செய்த விஷயம்:

கடைசி வரை அது நடக்காமலேயே போனது. இந்த நிலையில் பவதாரணியின் குரலை AI மூலம் பயன்படுத்தி கோட் படத்தில் மெலோடி பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா பாட வைத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் ஒன்றரை நிமிடங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

Advertisement

படம் குறித்த அப்டேட்:

இதனால் விஜயகாந்த்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட இருப்பதால் கோட் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு விஜய்யின் 50வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள், நிர்வாகிகள் பல ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

Advertisement