பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வெள்ளிக்கிழமை , செப்டம்பர் 25 பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

ஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அவரது சொன்ன கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

எஸ் பி பியின் மறைவை தொடர்ந்து அவரது பல்வேறு நினைவுகளை பற்றி இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இறப்பதற்கு முன்பாக எஸ் பி பி பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசியுள்ள எஸ் பி பி, கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம். அது நாம் செய்த பாவம் தான். நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டு சென்றார்கள். ஆனால் நாம் இயற்கையை மாசு படுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு செல்கிறோம்.

நாம் இயற்கையை பெருமளவு சேதம் செய்து விட்டோம் அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மேலும் பேசுகையில் தனக்கு கடவுள் கொடுத்த அருள், நான் இதுவரை பாடி கொண்டிருக்கிறேன். அதற்க்கு காரணம் ரசிகர்கள் தான். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. உங்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் என்று கூறியுள்ளார் எஸ் பி பி.

Advertisement
Advertisement