வலிமை படபிடிப்புக்கு நடுவே மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித். வைரலாகும் வீடியோ.

By subhashini · 29/2/2020

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் ட்ரைனர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார். கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.

மேலும், படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள். சமீப காலமாகவே அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். படத்தின் வேலைகள் மும்முரமாக போய் கொண்டு உள்ளது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயங்கள் ஆனாலும் அஜித் அவர்கள் அந்த காட்சியை நடித்துக் கொடுத்து விட்டுத் தான் சென்றார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லாமல் கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அஜித் துப்பாக்கி சுடுதல் துறையில் பயிற்சிகளை செய்து வருகிறார்.

https://twitter.com/AjithWeb/status/1233042312357265416

சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டு இருந்தார். மேலும், அது சம்பந்தமான புகைப்படம் , வீடியோ ஆதாரங்களும் இணையங்களில் வந்து இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full