விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியின் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஜயகுமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

Advertisement

விஜயகுமார் குடும்பம்:

இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய், அனிதா, கவிதா. மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.

அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். விஜயகுமார், விஜயகுமாரின் மகன் அருண் விஜய், விஜயகுமாரின் பேரன் ஆகிய மூன்று பேருமே சேர்ந்து நடித்திருந்த படம் ஓ மை டாக்.

Advertisement

ஸ்ரீதேவி குடும்பம் :

இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.டிகை ஸ்ரீதேவின் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். பிறகு இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் திருமணம் நடந்தது.

Advertisement

புலம்பும் ரசிகர்கள் :

இவருக்கு ரூபிகா என்ற மகளும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரின் வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது. அதனை கண்ட பலரும் இவர் ஏன் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழ் சினிமா ஒரு அழகியை நடிகையை இழந்துவிட்டது என்று கூறி வருகின்றனர்.

Advertisement