ஜெயிலர் டீசரில் ரஜினியின் குடும்ப போட்டோ - படத்துல இவரும் இருக்காரா ? நெல்சன் வைத்துள்ள ட்விஸ்ட்.

By Ajju · 13/12/2022

ஜெய்லர் படத்தின் டீசரில் வெளியாகி இருக்கும் புகைப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார்.

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருக்கிறார்கள். இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும் படக்குழுவிற்கு தெரிவித்து இருக்கிறார்கள்.

படத்தின் டீசர்:

மேலும், ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார். அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது தான் கதை. தீவிரவாதி கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் டீசர் நேற்று ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.

படத்தின் டீசரில் வரும் புகைப்படம்:

அந்த டீசரில் ரஜினிகாந்த் உடைய புகைப்படம் ஒன்று காண்பிக்கப்படுகிறது. அது ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமாக இருக்குமோ? என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், டீசரில் அந்த புகைப்படம் தெளிவாக தெரியவில்லை. படத்தில் பிளாஷ் பேக் சீன் கதைக்காக இந்த புகைப்படம் வைக்கப்பட்டிருக்கலாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், படம் வந்த பிறகு தான் அந்த புகைப்படம் என்ன என்று தெளிவாக தெரியும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full