ஏழைகளுக்கு உதவிவந்த 515 கணேசனுக்கு நடந்த சோகம்..!உதவிக்கரம் நீட்டிய லாரன்ஸ்..!

By Rajkumar · 1/12/2018
தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ஆலங்குடியில் இருந்துகொண்டு மகத்தான மக்கள் சேவை செய்துகொண்டிருக்கிறார் கணேசன். வயது 70-ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், `உதவி’ என்று யார் கேட்டாலும், காரை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். பிரசவம், அவசர சிகிச்சை... எனப் பல உதவிகளுக்காக 46 வருடங்களாக ஒரு ஆம்புலன்ஸ் போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கணேசனின் அம்பாசிடர். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை.ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் கணேசன். சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலில் கணேசனின் வீடும் சூறையாடப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய் விட்டார்.இந்த விடயத்தை அறிந்த லாரன்ஸ் தாமாக சென்று 515 கணேசனுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாரன்ஸ், சாதாரண வீடு மாதிரி இல்லாமல் எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும்...வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள் கட்டில் பீரோ மின் விசிறி ஏ.சி.என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. வீடு கட்ட சுமார் 7.50 லட்ச ரூபாய்க்கு மேலே ஆகும் மற்ற செலவுகளுக்கு 2.50 லடசம் செலவு ஆகும் மொத்தம் பத்து லட்சம் ஆகலாம் என்றாலும் பரவாயில்லை.எனென்றால் அவரை என் அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன்என்று பதிவிட்டுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full