பாலாவிற்கு தனது தாயாரின் கையால் 10 லட்சம் ரூபாயை கொடுத்த லாரன்ஸ் - ஏன் தெரியுமா ?

By Siva · 7/4/2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சாதாரண நபராகத்தான் விஜய் டிவியில் நுழைந்தார். மேலும் ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார்.

அதற்க்காக இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக்கொள்வார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் செய்யும் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது.

குக் வித் கோமாளிக்கு பிறகு இவர் தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர், புலிக்குட்டி பாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார்.

குக் வித் கோமாளி பாலா நடிகர் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவரும் ஆவார். தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைத்து வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது மட்டும்மால், ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும்  தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நடிகர் லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் பாலாவிற்காக ராகவா லாரன்ஸ், மேடையில் தன்னுடைய அம்மாவின் கையில் 10 லட்சம் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full