வறுமையில் வாடும் பில்லா 2 நடிகர் - உதவி செய்ததோடு வீடீயோவை அஜித்துக்கு அனுப்பி வைத்த லாரன்ஸ்.

By Rajkumar · 21/4/2020

திரை உலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். அந்த திறமையை காண்பித்து சாதனை படைக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அன்றாட வாழ்க்கையில் இருந்தே அந்த போராட்டம் என்பது துவங்கும், அதை எல்லாம் மீறி தான் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.அந்த வகையில் வறுமையால் கஷ்டப்பட்டு வருகிறார் நடிகர் தீப்பெட்டி கணேசன். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக இவரது நிலை மேலும் மோசமடைந்துள்ளது. தற்போது, உலகமெங்கும் 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். 'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

ஆகையால், பல துணை நடிகர்களின் நிலையும் கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. 2009-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் 'ரேனிகுண்டா'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். இதில் ஜானி, சனுஷா, நிஷாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். தீப்பெட்டி கணேசன் என்பவர் இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் வலம் வந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'தென்மேற்குப் பருவக்காற்று', 'தல' அஜித்தின் 'பில்லா 2', விஷ்ணு விஷாலின் 'நீர்ப் பறவை', 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் தீப்பெட்டி கணேசன்.

https://twitter.com/offl_Lawrence/status/1252513071622479872

கடைசியாக இவரது நடிப்பில் வெளி வந்த படம் 'கண்ணே கலைமானே'. பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்த இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.தற்போது, 'கொரோனா' லாக் டவுன் டைமில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், நடிகர் தீப்பெட்டி கணேசன் பொருளாதார ரீதியில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், பிரபல நடிகர்களான ஸ்ரீமன், பிரேம் குமார், பூச்சி முருகன் ஆகியோர் தீப்பெட்டி கணேசனுக்கு சில உதவிகளை செய்துள்ளனர்.

இதையடுத்து அதற்க்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் தீப்பெட்டி கணேசன். இந்த நிலையில் தீப்பெட்டி கணேசன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வீடியோ ஒன்றில் தனக்கு உதவி செய்யுமாறும் இந்த செய்தியை எப்படியாவது அஜித் சாரிடம் சேர்த்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை ட்விட்டார் வாசி ஒருவர் பகிர இதற்கு பதில் அளித்துள்ள லாரன்ஸ் இந்த வீடியோவை அஜித் சாரின் மேனேஜருக்கு பகிர்கிறேன் என்றும், அஜித்துக்கு இது போய் சேர்ந்தால் அவர் நிச்சயம் உதவி செய்வார். அவர் மிகவும் இரக்க குணம் கொண்ட மனிதர். என்னுடைய பங்கிற்கு நானும் இவரது குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறேன் இவருடைய தொடர்பு எண்ணை எனக்கு பகிருங்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full