வலிமை படத்தில் நடித்துள்ள காலா பட நடிகையிடம் அப்டேட் கேட்ட பிரபல நடிகர் (இவருதா குசும்பான ஆளாச்சே)

By Rajkumar · 30/3/2021

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது தல அஜித் 'வலிமை' படத்தில் நடித்து உள்ளார். பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பை அப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார். நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1 ஆம் தேதி அதாவது அஜித்தின் 50 வது பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் பிரபல நடிகரான சித்தார்த்தும் வலிமை அப்டேட்டை கேட்டு அன்புத்தொல்லை செய்துள்ளார்.

வலிமை படத்தில், காலா பட நடிகை ஹூமா குரேசியும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதற்கு கமன்ட் செய்த ஹூமா குரேசியிடம் 'மேடம் வலிமை அப்டேட்' என்று கமன்ட் செய்துள்ளார் சித்தார்த். இந்த கமென்டிற்கு ரசிகர்கள் பலரும் லைக்கை அள்ளி வீசி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full