ஆந்திராவில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தமிழ், இந்தி, இங்கிலிஷ் என்று கலந்து பேசிய லெஜண்ட் - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 24/7/2022

சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற தி லெஜண்ட் படத்தின் ப்ரோமஷன் விழாவில் தெலுகு பேசுவதாக நினைத்து இக்லீஷ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் பேசிய தி லெஜண்ட் அண்ணாச்சியின் வீடியோ பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு காலத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

https://twitter.com/thewreckedone_/status/1550885639318818816

அதிலும் பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்ற பாடல் மூலம் அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருந்தவர் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : 1969 முதல் 2021 வரை தாதா சாகெப் வாங்கியவர்களின் முழு லிஸ்ட் - இந்த ஆண்டு யாருக்கு கிடைக்கும் ? ஒரு அலசல்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்:

இருந்தாலும் இவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடித்து வரும் படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி இருக்கின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள்.

https://twitter.com/Adkarna/status/1551110041658626048

தி லெஜன்ட் படம்:

சரவணன் அருள் நாயகனாக நடித்த படத்திற்கு தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் ஊர்வசி ரவுட்லே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

https://twitter.com/JaiGaneshbri/status/1551029003175489537

பிரம்மாண்டமாக நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழா :

மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள்.ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு முன்னணி நடிகைகள் 10 பேரை கிளுகிளு உடைகளில் வந்து ரசிகர்களை கூழாக்கி இருக்கிறார் புது நடிகர் சரவணன் அருள். படத்தின் நடிகை ஊர்வசி ரௌடலாவிற்கு டிரைலர் வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து செல்வதற்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார். ஊர்வசி அடுத்தபடியாக பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவிற்கு 4 மணி நேரம் நிற்பதற்கு 65 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்.

https://twitter.com/Otteriinarii/status/1550910085114736640

பல மொழிகளில் பேசிய லெஜண்ட் :

அது மட்டுமல்லாது ட்ரைலர் விழாவில் பங்கேற்ற பல நடிகைகளுக்கு பணத்தை வாரி வழங்கி இருந்தார் அருள் அண்ணாச்சி. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில். இந்த படத்தை Pan இந்தியா லெவலில் ப்ரோமோஷன் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை ப்ரோமோட் செய்ய ஆந்திரா சென்ற அருள், மேடையில் தெலுங்கு பேசுகிறேன் என்று இக்லீஷ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் பேசி இருகிறார். அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full