ஆக்ஷனில் தூள் கிளப்பும் அண்ணாச்சி - வெளியான லெஜண்ட் சரவணனின் 2வது படத்தின் மாஸ் அப்டேட்
லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.
இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர்.
அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருந்தார். தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது.
தி லெஜன்ட் படம்:
இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இரங்கி இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு முதல் படத்தில் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டு தன்னுடைய இரண்டாம் படத்தில் திட்டமிட்டு
சரவணன் நடித்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=PQzuMEk0-eY
சரவணன் 2வது படம்:
இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் தான் இயக்கியிருக்கிறார். எதிர்நீச்சல், காக்கி சட்டை, பட்டாசு, கருடன் போன்ற படங்களை இயக்கியவர் தான் செந்தில்குமார். இந்த படத்தினுடைய கதை குறித்து அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. சீக்ரடாகவே வைத்துக்கொண்டு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஷியாம், அறந்தாங்கி நிஷா, அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ், பாயல் என பலரும் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=k5V0IxQzK_A
படத்தின் டீசர் வெளியீடு:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய டைட்டில் மட்டும் டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் படத்தில் லீடர் என பெயரிடப்பட்டிருக்கிறது. மகளை கொல்லவரும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்யும் ஒரு தந்தையின் கதாபாத்திரத்தில் தான் சரவணன் நடித்திருக்கிறார். தற்போது இந்த டீசர் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், இதுதான் இவருடைய ஒரிஜினல் அறிமுகப்படம். சரவணன் நடிப்பில் நன்றாக மெருகேற்றி இருக்கிறார் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.