லெஜண்ட் சரவணனின் 'லீடர்' படம் பாக்ஸ் ஆபிஸில் தட்டி தூக்கியதா? முழு நிலவரம் இதோ
லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் சொந்தமாக படநிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் லீடர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஷியாம், அறந்தாங்கி நிஷா, அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ், பாயல் என பலரும் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று தான் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
லீடர் படம்:
அதோடு லெஜன்ட் படத்தை விட இந்த படத்தில் சரவணன் நடிப்பு பாராட்டைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் அவருடைய நடிப்பில் நிறைய முன்னேற்றம் தெரிவதாக பலருமே சொல்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் லீடர் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, படம் வெளியான முதல் நாளிலேயே 83 லட்சம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் இனிவரும் நாட்களிலும் இந்த படம் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசூல் விவரம்:
படத்தில் ஹீரோ சரவணன் தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவர் தன் மகளோடு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். அம்மா இல்லை என்றாலும் தன் மகளை உயிருக்கு உயிராக பார்த்துக் கொண்டு வருகிறார் ஹீரோ. இன்னொரு பக்கம் தூத்துக்குடி ஹார்பரில் சட்டத்திற்கு புறம்பாக ஒரு கண்டெய்னர் வருகிறது. அப்போது இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா அந்த கண்டெய்னரில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க போராடுகிறார். ஒரு கட்டத்தில் சரவணன் இடம் ஒரு தாதாவின் கார் சர்வீஸுக்கு வருகிறது. தாதாவுக்கும் ஹார்பருக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சரவணன் கடைக்கு அடிக்கடி தாதா வந்து போகும் சூழ்நிலை வருகிறது.
கதைக்களம்:
இதனால் ஆன்ட்ரியா அந்த தாதாவை பிடிக்க திட்டம் போடுகிறார். ஆன்ட்ரியா, சரவணன் மகளை மறைத்து வைத்துவிட்டு தாதா தான் உன் மகளை கடத்தினார். அந்த கண்டைனரை வெளியே கொண்டு வா என்றெல்லாம் சொல்கிறார். இதனால் பயந்து போன ஹீரோ சரவணன் தன் மகளைக் காப்பாற்ற போலீஸ் ஆண்ட்ரியா சொல்வதை எல்லாம் செய்கிறார். ஆனால், உண்மையில் அந்த தாதாவை பிடிக்க ஸ்கெட்ச் போட்டது ஆன்ட்ரியா இல்லை சரவணன் தான். எதற்காக சரவணன் இப்படி செய்தார்? ஏன் செய்தார்? சரவணனுக்கும் அந்த தாதாவிற்கும் இடையே இருக்கும் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.