அப்பா-மகள் பாச கதையில் வெளிவந்த 'லீடர்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 3/4/2026

லெஜென்ட் சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லீடர். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஷியாம், ஆண்ட்ரியா, லால், பாயல் ராஜ்புட் உப்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமாக இன்று வெளியாகியிருக்கும் லீடர் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ சரவணன் தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவர் தன் மகளோடு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். அம்மா இல்லை என்றாலும் தன் மகளை உயிருக்கு உயிராக பார்த்துக் கொண்டு வருகிறார் ஹீரோ. இன்னொரு பக்கம் தூத்துக்குடி ஹார்பரில் சட்டத்திற்கு புறம்பாக ஒரு கண்டெய்னர் வருகிறது. அப்போது இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா அந்த கண்டெய்னரில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க போராடுகிறார் .

ஒரு கட்டத்தில் சரவணன் இடம் ஒரு தாதாவின் கார் சர்வீஸுக்கு வருகிறது. தாதாவுக்கும் ஹார்பருக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சரவணன் கடைக்கு அடிக்கடி தாதா வந்து போகும் சூழ்நிலை வருகிறது. இதனால் ஆன்ட்ரியா அந்த தாதாவை பிடிக்க திட்டம் போடுகிறார். ஆன்ட்ரியா, சரவணன் மகளை மறைத்து வைத்துவிட்டு தாதா தான் உன் மகளை கடத்தினார்.

அந்த கண்டைனரை வெளியே கொண்டு வா என்றெல்லாம் சொல்கிறார். இதனால் பயந்து போன ஹீரோ சரவணன் தன் மகளைக் காப்பாற்ற போலீஸ் ஆண்ட்ரியா சொல்வதை எல்லாம் செய்கிறார். ஆனால், உண்மையில் அந்த தாதாவை பிடிக்க ஸ்கெட்ச் போட்டது ஆன்ட்ரியா இல்லை சரவணன் தான். எதற்காக சரவணன் இப்படி செய்தார்? ஏன் செய்தார்? சரவணனுக்கும் அந்த தாதாவிற்கும் இடையே இருக்கும் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் ஹீரோ சரவணனுக்கு இது இரண்டாவது பருடம். இருந்தாலும் முதல் படத்தை விட இரண்டாவது படத்தில் நிறைய முன்னேற்றம் தெரிகிறது. நடிப்பு, மகளுடன் பாசம், ஆக்சன் என அனைத்திலுமே சரவணன் தூள் கிளப்பி இருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோ போல இந்த படத்தில் சரவணன் நடித்திருக்கிறார். இந்த படம் சரவணனுக்கு ஒரு உண்மையான கம்பேக் படமாக இருக்கும். அந்தளவிற்கு இயக்குனர், சரவணனை திரையில் காண்பித்திருக்கிறார்.

இது மிகப்பெரிய விஷயம். இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதமும் நேர்த்தியாக இருக்கிறது. படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை எந்த ஒரு சலிப்பையும் இல்லாமல் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் ஆன்ட்ரியா, ஷியாம் உட்பட பலருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் கதை பொறுமையாக சென்றாலுமே இடைவெளிக்கு பிறகு இயக்குனர் கதைக்களத்தை சூடு பிடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ், சண்டை காட்சிகள் எல்லாம்
அதிரவிட்டிருக்கிறது. டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. ஜிப்ரானினுடைய பின்னணி இசை மிரட்டி இருக்கிறது. மொத்தத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு இந்த படம் ஒரு கம்பேகாக அமைந்திருக்கிறது.

நிறை:

சரவணன் நடிப்பு அருமை

கதைக்களம் சூப்பர்

நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

சண்டை காட்சிகள் கிளைமாக்ஸ் சூப்பர்

ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாமே அருமை

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:

படத்தின் ஆரம்பத்தில் பொறுமையாக நகர்கிறது.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் இல்லை

மொத்தத்தில் லீடர் படம் - மகுடம் சூடும்

behindtalkies AMP · Quick view
View full