போஸ்டர் அடி,டிக்கெட் ரெடி - தயாராகும் லியோ மேடை - ரஜினிக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்?

By Arun · 26/9/2023

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

லியோ படம்:

இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது.

லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா:

மேலும், இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்று தான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆடியோ வெளியீட்டு விழா குறித்த செய்தி:

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்றும் திமுக பிரச்சனை செய்கிறது என்றும் சர்ச்சை எழுந்து இருந்தது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் லியோ படத்தின் 7 ஸ்கிறீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழா தொடர்பாக வந்த செய்திகள் உண்மை இல்லை என்று கூறி இருந்தார்கள்.

ஆடியோ வெளியீட்டு விழா அப்டேட்:

இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டுக்கான என்ட்ரி பாஸ்கள் எல்லாம் விஜய் ரசிகர் மன்ற தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இன்னும் சில தினங்களில் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதால் ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full