ஆஸ்கரை வென்ற லியோனார்டோ படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளிய விஜய்யின் ‘லியோ’

By Rajkumar · 24/10/2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் வசூல் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்தின் வசூலை முந்தியுள்ளது.விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த வாரிசு மற்றும் பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

https://twitter.com/7screenstudio/status/1715344740659421368

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகிஇருந்தது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருந்தது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருந்தது.

படம் குறித்த தகவல்:

ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் முதல் நாள் லியோ படம் 148 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

உலக அளவில் முதல் நாள் வசூல்:

இதற்கு முன்பு உலக அளவில் முதல் நாள் வசூலில்
பாகுபலி 2- 201 கோடி
RRR - 190 கோடி
கே ஜி எஃப் 2 -162 கோடி
ஜவான் -127 கோடி வசூல் செய்து இருந்தது.
ஜெயிலர் - 72 கோடி

டிகாப்ரியோ படத்தை மிஞ்சிய லியோ :

இந்த நிலையில்,லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்தின் வசூலை முந்தியுள்ளது. ‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ திரைப்படம் கடந்த 20ஆம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியானது. இப்படம் இந்தியாவில் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 44 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.  இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் வசூலை லியோ திரைப்படம் முந்தியுள்ளது.

https://twitter.com/indexofcinema/status/1716463156518883563

கடந்த 19 ஆம் தேதி உலகம் முழுதும் வெளியான லியோ திரைப்படம் அமெரிக்காவிலும் வெளியானது. லியோ திரைப்பம் உலக அளவில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக திரைப்படங்களின் வசூல் குறித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் தளம் தெரிவித்துள்ளது. இதனை முன்னணி அமெரிக்க ஊடகமான வெரைட்டி தளமும் உறுதி செய்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full