துணிவு படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை இரண்டே நாளில் முடித்துவிட்ட விஜய்யின் லியோ

By subhashini · 21/10/2023

அஜித்தின் துணிவு படத்தின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் லியோ படம் செய்திருக்கும் வசூல் வேட்டை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வாரிசு.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

லியோ படம்:

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக இரண்டு நாட்களுக்கு முன் தான் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதியெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 73 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ வசூல்:

முதல் நாளில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் 15 கோடி, கர்நாடகா 14 கோடி, கேரளா 11 கோடி. கேரளாவில் இதுவரை எந்த படமும் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்ததில்லை என்றும் முதல் முறை லியோ படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் லியோ படம் இரண்டே நாளில் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கிறது. இதுவரை 210 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.

இரண்டு நாளில் லியோ வசூல்:

அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படத்தின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் விஜயின் லியோ படம் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரை கோலிவுட்டில் யாரும் செய்யாத சாதனையை லியோ செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் லியோ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழு மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full