விஜயின் லியோ படத்தின் முதல் நாள் வசூல் சாதனை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வாரிசு.

இந்த படம் கலவியான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

Advertisement

லியோ படம்:

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்று அனைவரும் எதிர்பார்த்த லியோ படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

Advertisement

படம் குறித்த தகவல்:

ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் அடுத்த பாதையெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் முதல் நாள் லியோ படம் செய்திருக்கும் வசூல் வேட்டை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

உலக அளவில் முதல் நாள் வசூல்:

இதற்கு முன்பு உலக அளவில் முதல் நாள் வசூலில்
பாகுபலி 2- 201 கோடி
RRR – 190 கோடி
கே ஜி எஃப் 2 -162 கோடி
ஜவான் -127 கோடி வசூல் செய்து இருந்தது.
ஜெயிலர் – 72 கோடி

இந்தியாவில் முதல் நாள் வசூல்:

மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 30 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் 15 கோடி, கர்நாடகா 14 கோடி, கேரளா 11 கோடி. கேரளாவில் இதுவரை எந்த படமும் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்ததில்லை என்றும் முதல் முறை லியோ படம் வசூல் செய்து சாதனை படைக்கிறது படைத்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement