என்னது லியோ Flashback Fakeஆ? இது என்ன பேய் கதையா இருக்கு. ரசிகர்களின் Reactions

By Ajju · 22/10/2023

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். அந்த வகையில் இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் வசூல் ரீதியாக படம் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.

https://twitter.com/rinusree379/status/1715659414852735347?s=48

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் முதல் நாள் 73 கோடி வசூல் செய்திருக்கிறது. இத்தனைக்கும் ஸ்பெஷல் சோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் இந்த திரைப்படம் மற்ற ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இரண்டாம் பாதியில் மிகவும் தோய்வாகவே இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் பார்த்திபன் மற்றும் லியோ என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதில் யார் லியோ யார் பார்த்திபன் என்பதே இந்த படத்தின் மூலக்கதை. அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் வரை பார்த்திபன் கதாபாத்திரம் நான் லியோ இல்லை என்று கூறிக் கொண்டே இருக்கும். ஆனால், படம் பார்க்கும்போது இவர்தான் லியோ என்பதை ரசிகர்கள் எளிதாக கணிக்க முடியும் வகையிலேயே காட்சி அமைப்பு அமைந்திருந்தது. இப்படி பல விஷயங்கள் எளிதாக கணிக்க கூடிய வகையில் இருக்கும் நிலையில் லியோ குறித்து வரும் பிளாஷ் பேக் காட்சிகள் போலியானது என்ற புதிய உருட்டினை விஜய் ரசிகர்கள் உருட்டி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஒருவேளை லியோ கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் போலியாக கூட இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனை பார்த்திபன் லியோவை கொன்றுவிட்டு போதை பொருள் பழிவாங்க போகிறார் என்று ஒரு புறமும், லியோ தான் பார்த்திபனை கொன்றுவிட்டு லியோவாக வாழ்ந்து வருகிறார் என்றும் பல விதமான உறுப்புகளை விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும், லியோ பல முறை சட்டையை கழட்டிய போது கூட லியோவிற்கு flash பேக்கில் பட்ட குண்டடி தழும்பு இல்லை என்றும் இதனால் லியோ குறித்து மன்சூர் அலிகான் சொன்ன Flash back ஏ பொய் என்றும் உருட்டி வருகின்றனர். இதனால் லியோ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என்றும் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த உருட்டுகளை பார்த்து ரசிகர்கள் பலரும் பல விதமாக கேலி செய்து வருகின்றனர்.

இதுஒருபுரம் இருக்க லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால், படம் பார்க்கையில் அப்படி தெரியவில்லை. இதற்க்கு ஏற்றார் போல சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் 'படத்தின் கதையை முதலில் விஜய் தான் தேர்ந்தெடுத்தார். பின்னர் நான் அதில் சில மாற்றங்களை செய்யசொன்னேன். பின்னர் விஜயும் லோகேஷ் கனகராஜிடன் இதுகுறித்து பேசி இருந்தார். பின்னர் 10 நாட்கள் கழித்து கதையில் மாற்றம் செய்து வந்தார் லோகேஷ் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Tamil Behind Talkies AMP · Quick view
View full