லியோ எல்சியூவா? திரிஷா பதிவால் உறுதி செய்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்

By subhashini · 26/8/2023

திரிஷா பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பலரும் லியோ படம் எல்சியூ தான் என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ குறித்த செய்திகள் தான் உலா வந்து கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பையும் அதிக வசூல் சாதனையும் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி லிஸ்டில் சேர்ந்தது. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்-லோகேஷ் இணைந்து இருந்தார்கள். பின் தற்போது லியோ படத்தில் சேர்ந்து இருக்கிறார்கள். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல் வெளியாகி இருந்தது. அதேபோல் திரிஷா-விஜய் லியோ படத்தின் படப்பிடிப்புக்காக நார்வே சென்று இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இருந்தாலும், அதை லோகேஷ் சஸ்பென்சாக வைத்து வருகிறார். இதனால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

படத்தின் விற்பனை விவரம்:

இதனால் அவரின் பிறந்தநாள் அன்று அவரது கதாபாத்திரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதேபோல் அர்ஜுனின் பிறந்த நாளுக்கு அவருடைய கதாபாத்திரம் ஹரோல்ட் தாஸ் என்ற ப்ரோமோ வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப் கூட நடித்து இருக்கிறார். மேலும், இந்த படம் திரையில் வெளியாவதற்கு முன்பே இசை உரிமம், விநியோக உரிமம் என அனைத்திலும் விற்பனை பேசப்படுகிறது. கிட்டத்தட்ட இதுவரை லியோபடம் 350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

திரிஷா புகைப்படம்:

இந்த நிலையில் திரிஷாவினுடைய இன்ஸ்டாகிராம் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர் கையில் பழரசத்துடன் இருக்கும் புகைப்படம். அந்த புகைப்படத்தில் திரிஷா கையில் லியோ டேட்டுடன் இருக்கிறார். ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவின் கழுத்தில் தேள் டாட்டூ இருக்கும். தற்போது லியோ படத்தில் திரிஷாவின் உடைய கையில் டாட்டூ இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் கண்டிப்பாக இந்த படம் எல்சியூ-வாகத்தான் இருக்கும் என்று இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். படம் வெளி வந்தால் தான் இது எல்சியுவா? இல்லையா? என்பது தெரிய வரும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full