கடுமையான எனது கண்டனத்தால் படக்குழு அவசர அவசரமாக இந்த மாற்றத்தை செய்தது - ராஜேஸ்வரி பிரியா பதிவு.

By Arun · 28/6/2023

லியோ பாடலை தடை செய்ய வேண்டும், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது படக்குழு 'நான் ரெடி' பாடலில் மாற்றத்தை செய்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில் இந்த பாடலில் இடம்பெற்ற தண்ணி, தம் போன்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த பாடல் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும், புகைபிடிக்கும் காட்சிகளிலும் விஜய் நடித்திருக்கிறார்.

தற்போது இது தொடர்பாக தான் ரசிகர்கள் கோரிக்கை வைத்து சென்னை காவல் ஆணையர் இடத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.இதனால் இந்த பாடலை தடை செய்ய வேண்டும். விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அந்த வகையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, விஜய் பாடிய நா ரெடி பாடலுக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

படக்குழு செய்த மாற்றம் :

பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? எத பாடுறோம்னு கூட தெரியலேன்னா என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்க பொதுநலம் குறித்து இந்த மாணவர்களுக்கெல்லாம் விருது கொடுக்குறீங்க என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதே போல பலரும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த பாடலின் வீடியோவில் 'புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா 'கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது என்று குறிப்பிட்டுள்ளார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full