உதவி கேட்டு விஜய்க்கு மூதாட்டி எழுதிய கடிதம், மூன்று ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்

By Ajju · 22/3/2022

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளி வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெரும். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதோடு இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் இந்த முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். மேலும், விஜய்யின் அரபிக் குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பீஸ்ட் படத்தின் பாடல்கள்:

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். அதோடு இந்த பாடல் 185 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார்.

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி:

மேலும், இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் விஜய்க்காக மூதாட்டி ஒருவர் எழுதியிருக்கும் கடிதம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,

விஜய்க்கு மூதாட்டி எழுதிய கடிதம்:

நாமக்கல் மாவட்டம் மோகனுரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு உதவி செய்யும்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், விஜயின் முகவரி தெரியாததால் அவருக்கு தான் எழுதிய கடிதத்தை அனுப்ப முடியவில்லை. பின் அதனை தன் பேரனிடம் சொல்லி கொடுத்திருக்கிறார். தற்போது அந்த கடிதத்தையும் மூதாட்டியின் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்த தகவல் விஜய்க்கு போய் சேருமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தளபதி 66 படம் பற்றிய தகவல்:

மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘தளபதி 66’ படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full