தன் பெயரை கையில் பச்சை குத்திய ரசிகர் - வீடியோவை கண்டு லிப்ட் பட நடிகை என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

By Rajkumar · 8/10/2021

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நாடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'பிகில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்து வீராங்கனையாக நடித்த பல்வேறு நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார்.

அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். ஆனால், தெறி படத்தில் இவர் சரியாக கணிக்கப்படவில்லை. இருப்பினும் பிகில் படத்தில் தான் இவருக்கு பெரும் பிரபலம் கிடைத்தது. அதே போல இவர் தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படைவீரன் என்ற படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிகில் திரைப்படம் தான் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து இவர் 'வணக்கம் டா மாப்பிள' படத்தில் நடித்திருந்தார். அதே போல கவின் நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 'லிப்ட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவரின் தீவிர ரசிகர் ஒருவர் இவரது பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதனை கண்ட அமிர்தா, அந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, எதுக்கு இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. என்னுடைய நன்றியை சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடையாது. என் மீது நீங்கள் காட்டும் அன்பை நினைத்து நான் எப்போதும் பெருமை கொள்வேன். மிக்க நன்றி,உங்களை விரைவில் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full