'தேவரகொண்டா இல்லை,அனகோண்டா' தன்னை திட்டி தீர்த தியேட்டர் உரிமையாளரை நேரில் சென்று சந்தித்து விஜய் தேவர்கொண்டா என்ன செய்துள்ளார் பாருங்க.

By Siva · 29/8/2022

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார்.இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது. கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=wQ6IjgnpM0U

தற்போது இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகர் படம் பெரும் தோல்வி :-

இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்று ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த படம் வெளியாகிய அன்றைய நாளிலேயே பெரும் தோல்வியை சந்தித்தது. ஆம், படத்தை பார்த்த அனைத்துவித ரசிகர்களும் படத்தை கழுவி ஊற்றி விட்டனர். படத்தில் கதையே இல்லை எனவும் படம் படு மொக்கையாக இருக்கிறது எனவும் மோசமான விமர்சனங்களை மட்டுமே படம் சந்தித்தது. படம் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் தோல்வியை சந்தித்து விட்டது ஒரு மொழியில் கூட ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிவிட்டது.

விஜய் தேவர் கொண்டாவை திட்டி தீர்த்த தியட்டர் உரிமையாளர் :-

இந்நிலையில் படத்திற்கு முன்னதாக விஜய் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது ஒரு பேட்டியில் அலட்சியமா பேசியதால் தான் படம் தோல்வியை சந்தித்தது என மும்பையில் உள்ள தியேட்டர் உரிமையாளர் ஒருவர் விஜய் தேவர் கொண்டாவை கடுமையாக விமர்சித்தார். ஆம்,
சமீபகாலகவே அடிக்கடி பாலிவுட் திரையுலகில் Boycott பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்குமாறு பெரிய அளவில் பிரச்சாரம் நடந்தது. அதற்கு காரணம், 2015ஆம் ஆண்டு நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிராக அவருடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போது இந்த மாதிரி பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது.

https://twitter.com/BorntobeAshwani/status/1563887931491700736

லைகர் படத்தை புறக்கணிக்க ஹேஸ்டேக் :-

இப்படி விஜய் தேவர்கொண்டா, அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை அடுத்து அவருடைய நடிப்பில் ரிலீசாக இருக்கும் லைகர் திரைப்படத்தையும் புறக்கணிக்குமாறு #BoycottLigerMovie என்று ஹேஷ் டேக்குகளை போட்டு கண்டன குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், லைகர் படத்தின் மூலம்தான் பாலிவுட்டில் விஜய் தேவர் கொண்டா அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை கரண் ஜோகர் தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் தேவர்கொண்டாவுக்கு எதிராக படத்தைப் புறக்கணிக்குமாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழுவினர் மத்தியில் அச்சம் எழுந்தது.

https://twitter.com/FilmiFever/status/1563913923442913281

தன்னை திட்டிய தியேட்டர் உரிமையாளரை சந்தித்த விஜய் :-

இந்நிலையில் படக்கழு எதிர்பார்த்தது போல படம் தோல்வியை சந்தித்தது இந்நிலையில் பிரபல மராத்தே மந்திர் சினிமா தியேட்டர் உரிமையாளர் விஜய் தேவர் கொண்டானே அனகோண்டா எனவும் அவரின் அலட்சியமான பேச்சும் தான் காரணம் எனவும் பேசியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் தேவர் கொண்டா தன்னை விமர்சித்த தியேட்டர் உரிமையாளரை நேரில் சென்று சந்தித்து நான் பேசியதை அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டனர் எனவும் இனிமேல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் எனவும் கூறி அந்த தியேட்டர் உரிமையாளர் கூட எடுத்துக் கொண்டுள்ளார்.அந்த வீடியோ பாலிவுட்டில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full