தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் ‘liger’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகியுள்ள லைகர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் விஜய் தேவர் கொண்டா குத்து சண்டை வீரராக இருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே மைக் டைசனை குருவாக எண்ணிப் பார்த்து மார்சியல் ஆர்ட்ஸ் சாம்பியன் ஆக மாற வேண்டும் என நினைக்கிறார். இதற்கு இடையில் இவர் அனன்யா பாண்டேவை காதலிக்கிறார். பின் இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், விஜய் தேவர் கொண்டா குருவாக நினைக்கும் மைக் டைசன் தான் படத்தின் வில்லன். மொத்த கும்பலுக்கும் டானாக இருக்கிறார்.

Advertisement

அப்போது விஜய் தேவர் கொண்டாவின் காதலியை மைக் டைசன் கடத்தி விடுகிறார். இறுதியில் விஜய் தேவர் கொண்டா தன்னுடைய கடவுளாக நினைக்கும் மைக் டைசனை எதிர்த்து நின்றாரா? தன்னுடைய காதலியை விஜய் தேவர் கொண்டா மீட்டாரா? என்பதை படத்தின் கதை. வழக்கமான அரைத்த மாவையே தான் இயக்குனர் இந்த படத்தில் அரைத்து வைத்திருக்கிறார்.

படம் முழுக்க ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மகனை குறித்து விடும் பில்டப் டயலாக் எல்லாம் பார்வையாளர்களை எரிச்சல் ஊட்டுகிறது. அதை கேட்டு தியேட்டரிலேயே ரசிகர்கள் பலரும் கிண்டல் அடிக்க செய்துவிட்டனர். ஆனால், இந்த படத்திற்காக விஜய் தேவர் கொண்டா தன்னுடைய உடல் தோற்றத்தை பயங்கரமாக மாற்றி இருந்தார்.

Advertisement

அவர் ஆக்சன் காட்சியில் அசத்தி இருக்கிறார். ஆனால், திக்குவாய் கதாபாத்திரத்தில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை என்று தான் சொல்லணும். இந்த படத்தில் பெரிய மைனஸே காதல் காட்சி தான் இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் தேவர் கொண்டவை காதலித்த அனன்யா அவர் திக்குவாய் என்று தெரிந்ததும் விட்டு செல்கிறார். பின் அனன்யாவுடைய அண்ணனை விஜய் தேவர் கொண்டா அடித்ததும் அவர் மீது மீண்டும் காதல் வருகிறது.

Advertisement

காதலை வித்தியாசமாக காட்டுகிறேன் என்று சுதப்பி வைத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா உடைய நடிப்பு மட்டுமே பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக உள்ளது என்று சொல்லலாம். அதே போல் மைக் டைசன் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கிளாப்சை கொடுத்திருக்கிறது. காதல் காட்சியை வைக்கிறேன் என்று விஜய் தேவர் கொண்டாவின் கடின உழைப்பை இயக்குனர் வீணடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

நிறைகள் :

விஜய் தேவர்கொண்டா வின் நடிப்பு.

பின்னணி இசை, ஒளிப்பதிவு பக்கபலம்.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக பிளஸ் எதுவுமில்லை.

குறைகள் : :

இயக்குனரின் கதை மற்றும் திரைக்கதை பெரிய சொதப்பல்.

தமிழ் சினிமாவை மிஞ்சும் அளவு லூசு ஹீரோயின்

அம்மா- மகன் சென்டிமென்ட் டயலாக் எரிச்சலூட்டுகிறது.

மைக் டைசனையே அடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

தெலுங்கில் பாலிவுட் படம் எடுத்தது போல இருக்கிறது

பட்டாசு, சிங்கம் புலி படத்தை கூட மீண்டும் பார்த்துவிடலாம் என்று ரசிகர்கள் கிண்டல் அடிக்கும் வகையில் படம் இருக்கிறது.

மொத்தத்தில் லைகர் – தவறான breed

Advertisement