பாண்டிச்சேரியில் இருந்து வந்த ரம்யா கிருஷ்ணன். காரில் சிக்கிய சரக்கு பாட்டில்கள் - போலீசார் அதிரடி நடவடிக்கை.

By Rajkumar · 13/6/2020

பாண்டிச்சேரி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சரக்கு தான். பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்களை எடுத்து முயன்று பலர் போலீசிடம் சிக்கிய கதைகளை கேட்டுள்ளோம். அவ்வளவு ஏன் ஒரு படத்தில் ஜி வி பிரகாஷ் தனது திருமணத்திற்காக பாண்டிச்சேரியில் இருந்து சரக்குகளை காரில் கொண்டு வந்து போலீசிடம் சிக்கி சின்ன பின்னம் ஆவர். அது போல சம்பவம் தற்போது நிஜமாகவே பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு நடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் இவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இந்த நிலையில் பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்களுடன் வந்ததாக நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரை போலீசார் சீஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டு காட்டில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அங்கு வந்த இன்னோவா காரை மறித்து சோதனை செய்தபோது அதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் போலீசாரின் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த உள்ளனர்.

போலீசார் அந்த காரை சோதனை செய்த போது அந்த காரில் 96 பீர் பாட்டில்கள் 8 மதுபான பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த ரம்யா கிருஷ்ணனின் ஓட்டுநர் சென்னை அபிராமி புரத்தை சேர்ந்த செல்வகுமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் தனது காரின் ஓட்டுனர் செல்வகுமாரி நடிகை ரம்யா கிருஷ்ணன் சொந்த ஜாமீனில் அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tamil Behind Talkies AMP · Quick view
View full