காதலர் தின ஸ்பெஷல் - பிப்ரவரி 14-ம் தேதி என்னென்ன படம்கள் வெளியாக உள்ளது தெரியுமா?
வருகின்ற காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் பட்டியல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதையடுத்து இந்த வரம் காதலர் தினத்தை முன்னிட்டு என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்ப்போம்.
2கே லவ் ஸ்டோரி:
இயக்குனர் சுசீந்திரன் உருவாக்கி உள்ள 2கே லவ் ஸ்டோரி வருகின்ற காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகனாக ஜெகவீர அறிமுகம் ஆகியுள்ளார். நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களோடு பாலா சரவணன், ஜெயபிரகாஷ், வினோதினி, ஆண்டனி பாக்யராஜ் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். புகைப்படம் எடுக்கும் ஒரு இளைஞரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறதாம்.
தினசரி:
ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது 'தினசரி' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், ஹீரோயினாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் கடந்த மாதம் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில், ஹீரோயின் சிந்தியாவை பலரும் ட்ரோல் செய்து இருந்தனர். அதற்கு நடிகர் ஸ்ரீகாந்த் சரியான பதிலடி கொடுத்திருந்தார். இந்தத் திரைப்படமும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ஃபயர்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி மற்றும் பாலாஜி முருகதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஜே எஸ் கே சதீஷ் இயக்கி இருக்கிறார். மேலும், இப்படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம் புலி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி நடித்துள்ளார்கள். இந்த படத்தில் முதல் முறையாக ரக்ஷிதா மகாலட்சுமி பயங்கர கிளாமராக நடித்துள்ளார். இந்த படமும் வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
ஒத்த ஓட்டு முத்தையா:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஒத்த ஓட்டு முத்தையா' . இப்படத்தில் யோகி பாபு, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதோடு சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவுண்டமணியின் கலகலப் பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இப்படம் வருகின்ற காதலர் தினத்தன்று திரையில் வெளியாக உள்ளது.
காதல் என்பது பொதுவுடமை:
தன் பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் தான் காதல் என்பது பொதுவுடமை. இத்திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பல வருடத்திற்கு பிறகு வினித் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கண்நீரா:
மலேசியா வாழ் தமிழர் ஆன கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் தான் கண்நீரா. இப்படத்தில் நாயகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி மற்றும் நந்தகுமார் NKR உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கண்நீரா என்பது கண்ணுக்குள் இருக்கிற நீர் என்று பொருள். காதல் என்றாலே கண்ணீருக்கு பஞ்சம் இருக்காது. அதோட படத்தின் நாயகியின் பெயர் நீரா என்பதால் இரண்டையும் இணைக்கும் விதமாக இப்படத்திற்கு 'கண்நீரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.