நான் ஜோதிகாவ மீட் பண்ண பாத்த, இதை பார்க்க வேண்டும் - லிட்டில் ஜான் பாட ஹீரோ லேட்டஸ்ட் பேட்டி.
சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள் அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக, ஹீரோவாக மற்றும் குணச்சித்திர நடிகராக பல நடிகர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்தவர்கள் உண்டு.2001 ஆம் ஆண்டு வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் பென்ட்லி மிச்சம், ஜோதிகா, அனுபம் கெர், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகிய பல நடிகர்கள்நடித்திருந்தனர்.
https://www.instagram.com/p/CBXnW4XgK4h/?igshid=1h73zh91uriml
இந்த படத்தில் லிட்டில் ஜானாக நடித்த பென்ட்லி மிட்சம் 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற நகரில் பிறந்தவர். இவருடைய தந்தை கிரிஸ்டோப மிட்சம். இவர் ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆவர். மேலும், ஒட்டுமொத்த குடும்பமும் நடிகர்கள் , நடிகைகள், மாடலிங் என கலை துறையில் உள்ளனர்.இந்த மொத்த குடும்பமும் கலை குடும்பமாகவே திகழ்ந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பென்ட்லி மிட்சம் பேசுகையில் லிட்டில் ஜான் படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த படத்திற்கு பின்னர் நான் ஜோதிகாவை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை எப்படியாவது இதை அவர் இந்த வீடீயோவை பார்க்க வேண்டும். தற்போது லிட்டில் ஜான் 2 வந்தால் எப்படி இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்போது நான் ஒரு மியூசிக் பேண்ட் வைத்து நடத்தி வருகிறேன். அடிக்கடி அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிடுகிறேன் அனைவரும் அதற்கு ஆதரவு அளியுங்கள் என்று கூறியிருக்கிறார்
https://www.youtube.com/watch?v=IWkQkbDaBcE
1997 ஆம் ஆண்டு இவர் நோல்லி பேக்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஹலோனோ மிட்சம் என்ற மகளும் உள்ளார்.மேலும்,2003ம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக நோல்லி பேக்வார்,பென்ட்லி மிட்சம் ஆகிய இருவருக்கும் விவாகரத்து நடந்தது.பின் 2004இல் ஜெய் மார்ஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.