இந்த விஷயத்தில கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ரத்தினகுமார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 29. இந்த படத்தில் விது- ப்ரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச், லோகேஷ் கனகராஜின்
நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். மே எட்டாம் தேதி இந்த படம் திரைக்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்தினகுமார்
ரொம்ப நாட்கள் ஆகவே எனக்கு சக போட்டியாளனாக தான் இருக்கிறார். நானும் ரத்னாவும் முதல் படம் பண்ணுவதற்காக தெரு தெருவாக சுத்தி இருக்கிறோம்.
29 படம்:
அந்த சமயத்தில் தான் பீட்சா படம் வெளிவந்தது. அந்த படம் தான் எங்களை போன்றவர்களுக்கு கதவை திறந்து வைத்தது. இன்றைக்கு இருக்கும் நிறைய இயக்குனர்களுக்கும் அந்த படம் கதவை திறந்து வைத்தது.. அந்த படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் நிறுவனம் நிறைய ஷார்ட் பிலிம்களை தயாரித்து ரிலீஸ் செய்திருந்தார். ரத்னாவின் உடைய முதல் ஷார்ட் பிலிம் மது, என்னுடைய அவியல் ஷார்ட் பிலிம் அப்படிதான் ரிலீஸ் ஆனது. கார்த்திக் சுப்புராஜ், ரத்னாவை மட்டும் இல்லை என்னையும் அவர்தான் அறிமுகம் செய்து வைத்தார்.
லோகேஷ் சொன்னது:
அப்போது அடைக்கலம் ஆதரவு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருடன் சேர்ந்து இப்போது படம் தயாரித்து இருப்பது நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது. இந்த அளவிற்கு எனக்கு ஒரு இடத்தை கொடுத்ததற்கு மக்களுக்கு நன்றி. நாம் வளரும் போது நம்முடன் இருப்பவர்களையும் வளர்த்து விட வேண்டும். வாய்ப்பிருக்கும் போது அதை செய்து விட வேண்டும்.
https://www.youtube.com/watch?v=chwjyz7rkh4
சினிமா அனுபவம்:
இந்த இன்ஸ்பிரேஷனுக்கு காரணம் கமல் சார் தான். அவரிடம் இருந்துதான் இதை நான் கற்றுக் கொண்டேன். சினிமாவில் சம்பாதித்தை சினிமாவிற்கு கொடுக்க வேண்டும் என்பதை அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். என்னுடைய படங்களுக்கு ஆதரவு கொடுத்த மாதிரி என்னுடைய தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கும் ஆதரவு கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.