ரஜினியின் கூலி டைம் டிராவல், சயின்ஸ் பிக்சன்ஸ் படமா? - லோகேஷ் கனகராஜ் கொடுத்த நச் பதில்

By subhashini · 5/8/2025

கூலி படத்தின் விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கூலி படம்:

இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது.

படம் பற்றிய தகவல்:

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் ரஜினி பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் சொன்னது:

அதன் பின் கூலி படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், டைம் ட்ராவல் மையப்படுத்திய கதை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் கூலி படத்தினுடைய ப்ரமோஷன் நிகழ்வு நடைபெற்று இருந்தது. இதில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், நான் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வரும் பதிவுகளை எல்லாம் படிப்பேன். மக்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம் என்னையும் ரொம்பவே சர்ப்ரைஸ் செய்தது.

https://www.youtube.com/watch?v=atf2BAYpqt4

படத்தின் கதை:

நானும் இப்போதுதான் சத்யராஜ் சாரிடம் இதை பற்றி சொன்னேன். அனைவரும் இந்த கூலி படத்தை சயின்ஸ் பிக்சன், டைம் டிராவல் படம் என சொல்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், படத்தை பார்த்து மக்கள் ஆச்சரியப்படுவதை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். நான் கமல் சாருடனும் ரஜினி சாருடனும் வேலை பார்த்து விட்டேன். இருவருக்குமே எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே மிகப்பெரிய லெஜன்ட் தான். ரெண்டு பேருமே ஓஜிதான். சொல்லப்போனால், இருவருமே என்னுடைய கண்கள் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full