ரஜினி-கமல் படத்தை மறுக்க இது தான் காரணம் - உண்மையை போட்டுடைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த படம் கூலி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து எடுக்கும் படத்திற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கூலி படத்திற்கு பிறகு நான் ஊடக நண்பர்களிடம் சரியாக பேசவில்லை. சில விஷயங்கள் பற்றி பேச இருப்பதால் தான் இந்த சந்திப்பு. கூலி படம் 35 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. அதற்கு மக்களுக்கு நன்றி. அந்த படத்தை விமர்சித்தவர்களுக்கும் நன்றி. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
லோகேஷ் பேட்டி:
என்னுடைய அடுத்த படங்களில் அதை சரி செய்வேன். கூலி படத்தை அடுத்து கைதி 2 படம் எடுப்பதாக இருந்தது. கூலி படம் வெளியாகும் போது தான் ரஜினி- கமல் இருவரையும் சந்தித்தேன். இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொன்னார்கள். இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று கைதி 2 படத்தை நிறுத்திவிட்டேன். ரஜினி- கமல் அவர்களுக்கான கதையை எழுதிக் கொண்டு போய் தனித்தனியே கொடுத்தேன். இருவரும் தொடர்ந்து ஆக்சன் படமாக நடித்துக் கொண்டு வருவதால் லைட் ஹார்ட் படமாக கேட்டிருந்தார்கள்.
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
அந்த மாதிரியான கதை எனக்கு வராது என்பதால் அதை அவர்களிடம் சொல்லி அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன். ஆனால், சோசியல் மீடியாவில் நான் நிறைய சம்பளம் கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்ததால் தான் விலகிவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அதெல்லாம் உண்மை கிடையாது. அதோடு கைதி 2 பட குழுவினர் வேறு ஒரு படங்களில் ஒப்பந்தமாகி இருந்தார்கள். இதற்கிடையில் ஆறு வருடங்களுக்கு முன்பு மைத்திரி பிக்சர்ஸ் எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அதனால் தான் அல்லு அர்ஜுன் வைத்து படம் எடுக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=nv0sH6hJajs
படம் அப்டேட்:
இது அடுத்து கண்டிப்பாக கைதி 2 படத்தை எடுப்பேன். எல்சியூம் முடிந்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள். இது ரசிகர்கள் கொடுத்தது என்றும் முடியாது. கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் எல்லாமே கமிட்மெண்ட்ஸ். இதை நான் பண்ணாமல் போக முடியாது. இது எல்லாமே என்னுடைய வாக்குறுதிகள். எல்சியூ தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது தவிர இன்னும் முடிவுக்கு வரவில்லை. அல்லு அர்ஜுன் படத்தை முடித்த பிறகு எல்சியூ மீண்டும் மீண்டும் தொடங்கும்.
அதோடு எல்சியூவின் ஒரு பகுதியாக தயாராகும் படங்களும் வெளியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்