தமிழ் நாட்டை தமிழகம் என்றால் சரியாக இருக்கும் என்ற ஆளுநர் ரவி பேச்சுக்கு தமிழ் நாட்டில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் காட்சிகள் வன்மையாக கண்டித்து வரும் நிலையில் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமலஹாசன் இந்த விஷயம் பற்றி பேசியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் உரை :

இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த்தை கௌரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது பிரதமர் மோடியினால் தான் இந்த காசி தமிழ் சங்கமம் நடந்தது என்றும் காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறினார். மேலும் விடுதலை போராட்டத்தில் போது பல்வேறு பிரிவினைகள் நம்மிடம் இருந்தது இப்போது ஒரே பாரதம், பாரதம் என்பது ரிஷிகள் மற்றும் ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது என கூறினார்.

Advertisement

தமிழகம் என்பதுதான் சரியான :

மேலும் ஆங்கிலேயர்கள் நம்மை பிரிக்க முயற்ச்சி செய்த்தனர். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. இங்கு எதிர்மறை அரசியல் நடத்தப்படுகிறது. இந்தியா என்பது ஒரே நாடுதான். ஆனால் பலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் என்று எண்ணுகிறார்கள். தமிழர்கள் தங்களை திராவிடர்களாக எண்ணிக்கொள்கின்றனர். தமிழ் நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கூறினார் ஆளுநர்.

லோகேஷ் கனகராஜ் கூறியது :

இப்படி ஆளுநர் தமிழ் நாடு என்பதை தமிழகம் என சொல்ல வேண்டும் என்று குறித்த பெரும் சர்ச்சையாக வெடுத்துள்ள நிலையில் பல அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்பினரும் கடுமையான கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் விக்ரம் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜிடம் தமிழகம் என்று ஆளுநர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் தமிழ் நாடு என்று தான் சொல்ல விரும்புகிறேன் என்று கூறினார். மேலும் இவர் தற்போது விஜய் உடன் இணைத்து தளபதி 67 எடுக்குள்ளார் அதன் அப்டேட் வரும் பொங்கலுக்கு வரும் என்று தெரிகிறது.

Advertisement

கமலஹாசன் பதிவு :

இது ஒருபுறம் இருக்க உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் போட்டுள்ள பதிவில் ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் “தமிழ் நாடு வாழ்க” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Advertisement