LCUனு போட்டத நோட் பன்னீங்களே பக்கத்துல போட்டிருந்த அத கவனிசீங்களா ? உதயநிதி டீவீட்டை Decode செய்த லோகேஷ் கனகராஜ்.

By Rajkumar · 18/10/2023

லியோ படம் குறித்து உதயநிதி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

https://twitter.com/dp_karthik/status/1714389595926999348

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

அரசாங்க உத்தரவு:

மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ந்த பிரச்சினை காரணமாக சென்னையில் முக்கிய திரையரங்களில் டிக்கெட் முன்பதிவு நடைபெறவில்லை. ஆக மொத்தம், தமிழகத்தில் மட்டும் லியோ படம் ஒன்பது மணிக்கு வெளியாக இருக்கிறது.

LCU வா ?

கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் அதிகாலை நான்கு மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. லியோ படத்திற்க்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்க காரணம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்கள் தான். அதிலும் லியோ படம் LCUவில் வருமா இல்லையா என்று பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், இதுநாள் வரை இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்து வருகிறார் லோகேஷ்.

உதய் பதிவு குறித்து லோகேஷ் :

இப்படி ஒரு நிலையில் இன்று அதிகாலை இந்த படத்தை பார்த்துவிட்டு பதிவு ஒன்றை போட்டு இருந்தார் உதயநிதி. அந்த பதிவில் #LCU என்று குறிப்பிட்டதை கண்டு லியோ படம் LCU என்று உதயநிதி சொல்லவிட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சற்று முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் 'LCUவ கவனிசீங்க, பக்கத்துல கண்ணடிக்கிற மாதிரி போட்ட எமோஜிய கவனிச்சீங்களா ? எனவே நாளைக்கு காலைல தான் அத பத்தி தெரியும் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full